Tuesday, July 7, 2009

தரவரிசையில் யுவ்ராஜ் 2-வது இடம்

lankasri.com ஐ.சி.சி. ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் தோனி நிலைத்திருக்க மற்றொரு அதிரடி வீரர் யுவ்ராஜ் சிங் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் யுவ்ராஜ் பெறும் அதிகபட்ச இடம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரை 2-1 என்று கைப்பற்றினாலும் இந்தியா ஒரு நாள் கிரிக்கெட் அணிகள் தரவரிசயில் இரண்டாம் இடம் முன்னேற முடியவில்லை. 3ஆம் இடத்திலேயே உள்ளது.

அதாவது 4 ஒரு நாள் போட்டிகளிலும் வெற்றி பெற்றால்தான் இந்தியா 2-வது இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது.

யுவ்ராஜ் சிங் மேற்கிந்திய அணிக்கு எதிரான தொடரில் 131, 35, 2 என்று ரன் எடுத்திருந்தார். 4-வது ஒரு நாள் போட்டி நேற்று மழை காரணமாக 8 ஓவரகளுக்குப் பிறகு கைவிடப்பட்டது

MailPrint ஆங்கிலோ இந்தியராக நடிப்பது உறுதி – த்‌ரிஷா

ஏற்கனவே ஒப்புக் கொண்ட வெற்றிமாறனின் ஆடுகளம் படத்திலிருந்தும் விலகியிருக்கிறார். கடந்த ஒரு வாரமாக உலவி வரும் இந்த செய்தியால் த்‌ரிஷா அப்செட்.

தெலுங்கில் தொடர்ந்து இரண்டு படம் நடித்தால் தமிழை கண்டுக்கலைன்னு சொல்றாங்க. இந்தியில் நடித்தால் தமிழ், தெலுங்கை கை கழுவிட்டேன்னு புரளி கிளப்புறாங்க. இது எதுவுமே உண்மையில்லை என்றார் த்‌ரிஷா.

தெலுங்கில் ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி கோபிசந்த், வெங்கடேஷ் ஆகியோருடன் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். அதேபோல் விண்ணைத் தாண்டி வருவாயா, ஆடுகளம் படத்திலும் நடிக்கிறாராம். வெற்றிமாறனின் ஆடுகளம் படத்திலிருந்து த்‌ரிஷா விலகுவதாக வந்த செய்திகளில் உண்மையில்லையாம்.

இந்தப் படத்தில் ஆங்கிலோ இந்தியராக வருகிறார் த்‌ரிஷா. இந்த வேடத்துக்காக சுருட்டை தலைமுடி, கா‌ண்டாக்ட் லென்ஸ் என முதல் முறையாக கெட்டப் மாற்றும் ஐடியாவில் இருந்தார் த்‌ரிஷா. இந்நிலையில் படத்தில் நடிக்கவில்லை என்று வந்த செய்தி அவரை ரொம்பவே பாதித்திருக்கிறது. நல்ல கேரக்டர் கண்டிப்பாக நடிப்பேன் என்றார் உறுதியாக.

இது ஒருபுறமிருக்க, இந்திப் படத்துக்கு த்‌ரிஷா தொடர்ச்சியாக கால்ஷீட் கொடுத்திருப்பதால் ஆடுகளத்தில் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் தயா‌ரிப்பாளருக்கு இருக்கிறது. அதனால், வேறு ஹீரோயின் தேடி வருவதாகவும் தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. பொல்லாதவனை தயா‌ரித்த கதிரேசனே ஆடுகளத்தையும் தயா‌ரித்து

MailPrint இறுதிகட்ட படப்பிடிப்பில் ‘கண்டேன் காதலை

MailPrint
இறுதிகட்ட படப்பிடிப்பில் ‘கண்டேன் காதலை’

சுமார் பதினைந்து படங்கள் நடித்துவிட்டாலும் பரத்திற்கு ஹிட்டான படங்கள் என்று பார்த்தால் காதல், வெயில்

இரண்டையும் தான் சொல்ல முடியும். மற்ற படங்கள் எல்லாம் சுமார் ரகம்தான். அடுத்து பரத் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் கண்டேன் காதலை. இந்த படத்தை மொசர்பேர் நிறுவனம் தயாரிக்கிறது. கண்டேன் காதலில் பரத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.

Viduppuஇந்தப் படத்தின் கதை இந்தியில் வெளியாகி சக்கைபோடு போட்ட ஜாப் வி மெட் படத்தின் கதைதான். படத்தின் பெரும்பாலான காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு விட்டன. படத்தின் இறுதிப் படப்பிடிப்பு தற்போது மதுரை, கோடைக்கானல், மூணார் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

பாடல் படப்பிடிப்புடன் 27ஆம் தேதியுடன் படப்பிடிப்பு நிறைவடைகிறது. செப்டம்பர் முதல் வாரத்தில் இந்தப் படம் வெளியிடப்பட உள்ளதாகவும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஆடியோ வெளியிடப்போவதாகவும் மொசர்பேர் நிறுவனத்தின் சி.இ.ஒ. தனஞ்சயன் தெரிவித்துள்ளார்.


கண்டேன் காதலை படத்திற்கு இசை வித்யாசாகர். பரத் மலையாளத்தில் நடித்து தமிழில் டப் செய்யப்பட்ட 4 தி பீப்பிள் படம் தமிழில் நன்றாக ஓடியது. இந்த படமும் இந்தியில் இருந்து ரீமேக் செய்யப்படுவதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது...

ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

மேக்கப் போடுகிறார் காஜல் அகர்வால் தங்கை

மேக்கப் போடுகிறார் காஜல் அகர்வால் தங்கை

காஜல் அகர்வால் பொம்மலாட்டம், பழனி உட்பட சில படங்களில் நடித்தார்.

வந்த வரைக்கும் லாபம் என பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து தற்போது அந்த படங்களில் நடித்தும் வருகிறார். அந்த படங்கள் ஓடுகிறதோ இல்லையோ...

காஜல் அகர்வால் கல்லாப் பெட்டி மட்டும் நிறைகிறதாம். இந்நிலையில் காஜல் அகர்வாலின் தங்கை நிஷாவும் நடிக்க வருகிறார். காஜல் அகர்வால் தெலுங்கில் படம் பண்ணிய பிறகுதான் தமிழுக்கு வந்தார். ஆனால் நிஷாவோ நேரடியாக தமிழுக்கு இறக்குமதியாகிறார்.

இது குறித்து காஜலின் தந்தை ‘காஜல் அகர்வாலை தமிழ் சினிமா நல்ல அங்கீகாரம் கொடுத்து ஏற்றுக் கொண்டது(?). அவரைத் தொடர்ந்து அவரது தங்கை நிஷாவும் நடிக்க வருகிறார். தமிழில் நடிக்கும் அதே நேரத்தில் தெலுங்கிலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நிஷாவையும் தமிழ் சினிமா உரிய அங்கீகாரம் கொடுத்து ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறேன்’. என்றார்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகமாச்சே... இன்னும் யாராச்சும் இருந்தாகூட வரச்சொல்லுங்க..

மோதிவிளையாடும்



சரண் இயக்கத்தில் விநய் நடிக்கும் படம் ‘மோதி விளையாடு’ இந்தப் படம் தற்போது காலதாமதத்தில் சிக்கித் தவிக்கிறது

வெள்ளியங்கிரியில் ஸ்ரேயா

வெள்ளியங்கிரியில் ஸ்ரேயா

வெள்ளியங்கிரி ஏதோ படம் போலவும் ஸ்ரேயா அதில் நடிக்கப் போவதாகவும் நீங்கள் நினைத்தால் ஏமாந்து போவீர்கள்


sri