Tuesday, July 7, 2009

MailPrint ஆங்கிலோ இந்தியராக நடிப்பது உறுதி – த்‌ரிஷா

ஏற்கனவே ஒப்புக் கொண்ட வெற்றிமாறனின் ஆடுகளம் படத்திலிருந்தும் விலகியிருக்கிறார். கடந்த ஒரு வாரமாக உலவி வரும் இந்த செய்தியால் த்‌ரிஷா அப்செட்.

தெலுங்கில் தொடர்ந்து இரண்டு படம் நடித்தால் தமிழை கண்டுக்கலைன்னு சொல்றாங்க. இந்தியில் நடித்தால் தமிழ், தெலுங்கை கை கழுவிட்டேன்னு புரளி கிளப்புறாங்க. இது எதுவுமே உண்மையில்லை என்றார் த்‌ரிஷா.

தெலுங்கில் ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி கோபிசந்த், வெங்கடேஷ் ஆகியோருடன் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். அதேபோல் விண்ணைத் தாண்டி வருவாயா, ஆடுகளம் படத்திலும் நடிக்கிறாராம். வெற்றிமாறனின் ஆடுகளம் படத்திலிருந்து த்‌ரிஷா விலகுவதாக வந்த செய்திகளில் உண்மையில்லையாம்.

இந்தப் படத்தில் ஆங்கிலோ இந்தியராக வருகிறார் த்‌ரிஷா. இந்த வேடத்துக்காக சுருட்டை தலைமுடி, கா‌ண்டாக்ட் லென்ஸ் என முதல் முறையாக கெட்டப் மாற்றும் ஐடியாவில் இருந்தார் த்‌ரிஷா. இந்நிலையில் படத்தில் நடிக்கவில்லை என்று வந்த செய்தி அவரை ரொம்பவே பாதித்திருக்கிறது. நல்ல கேரக்டர் கண்டிப்பாக நடிப்பேன் என்றார் உறுதியாக.

இது ஒருபுறமிருக்க, இந்திப் படத்துக்கு த்‌ரிஷா தொடர்ச்சியாக கால்ஷீட் கொடுத்திருப்பதால் ஆடுகளத்தில் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் தயா‌ரிப்பாளருக்கு இருக்கிறது. அதனால், வேறு ஹீரோயின் தேடி வருவதாகவும் தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. பொல்லாதவனை தயா‌ரித்த கதிரேசனே ஆடுகளத்தையும் தயா‌ரித்து

No comments:

Post a Comment